நவம்பர் 24, 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்சமயம் சம்பா நெற்பயிர், சிறுதானிய பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கான பயிர்காப்பீடு நடைபெறுவதாக அறிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 30ஆம் தேதிக்குள்ளும் , தஞ்சாவூர், அரியலுர் உள்ளிட்ட 9மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள்ளும் சம்பா நெல்பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.