வருகிற 26-ம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அனைத்து துறை செயலாளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வருகிற 26-ம் தேதி அங்கீகரிக்கப்படாத சில சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அன்றைய தினம் அனைத்து அரசு ஊழியர்களும் கண்டிப்பாக பணிக்கு வரவும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு அன்றைய தினத்துக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் அன்றைய தினம் பணிக்கு வந்தவர்களின் விவரங்களை காலை 10:30 மணிக்குள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.