தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வரும் 25ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று வர இ பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பதி, சித்தூர், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பல லட்சம் பேர் பயன் அடைவார்கள். ஏற்கனவே கர்நாடகா, புதுச்சேரிக்கும் தமிழக அரசு போக்குவரத்தை அனுமதித்துள்ளது.