செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் 14 லட்சத்து 90 ஆயிரம் பெயர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளாதாரச் செயல்பாடுகள் முழு வேகம் பெற்றுள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரித்தது. இதனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் ஆகஸ்டில் 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் புதிதாக 14 லட்சத்து 90 ஆயிரம் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் நடப்பு நிதியாண்டின் முதலிரு காலாண்டுகளில் சேர்க்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 92 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.