அரியானாவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பங்களுக்கு உதவுமாறு, அம் மாநில முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியானா முதலமைச்சர் மனோகர் லாலுக்கு எழுதி உள்ள கடிதத்தில், பஞ்ச்குலா மாவட்டம் மகேஷ்பூர் என்ற கிராமத்தில் உள்ள தமிழ் காலனியில் சுமார் 200 தமிழ் குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக வசித்து வந்ததாக சுட்டிக்காட்டி உள்ளார்.
தற்போது,
மாற்று இடம் எதுவும் கொடுக்காமல், தமிழ் குடும்பங்கள் திடீரென வெளி யேற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.