தமிழக காவல்துறைக்கு கடந்த 12 ஆண்டுகளில் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க கோரப்பட்ட டெண்டர் விவரங்களை வழங்குமாறு டிஜிபி அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
வாக்கி டாக்கிகள், செல்போன், சி.சி.டி.வி, ஜி.பி.எஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2020 வரையிலான டெண்டர் விவரங்களை அளிக்கும்படி டிஜிபி அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், 2008-ல் இருந்து 5 லட்ச ரூபாய்க்கும் மேல் எந்தெந்த டெண்டர்கள் விடப்பட்டது? அந்த டெண்டர்களுக்கு பொறுப்பு வகித்த அதிகாரிகள் யார்? எவ்வளவு தொகை டெண்டர் விடப்பட்டது ? என்பது உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டுள்ளன.