திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை நடைபெறவிருக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்ய 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முருகபெருமானின் 2ம் படை வீடான அக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடற்கரையில் மிகவும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், அதை காண பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆதலால் பிற பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதை தடுக்க திருச்செந்தூரில் 5 சோதனைச் சாவடிகளை அமைத்தும், மாவட்ட எல்லை பகுதியில் 8 சோதனைச் சாவடிகளை அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலுக்கு சொந்தமான யூ-டியுப் சேனலிலும், பிற தொலைக்காட்சிகளிலும் சூரசம்ஹாரத்தை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.