ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தற்போது ஆழ்கடல் பகுதியிலும் அனுமதி கொடுத்துள்ளது குறித்து முதலமைச்சரோ அமைச்சர்களோ எதுவும் கூறாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்றார்.
மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் இந்த திட்டம் குறித்து இதுவரை காவிரி டெல்டாவை சேர்ந்த அமைச்சர்களோ தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.