அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீது, 280 கோடி ரூபாய் வரை நிதி மோசடி என புகார் எழுந்துள்ளதால் நிதி அலுவலர்கள், ஆடிட்டர் துணையுடன் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக, நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனங்கள், மகளுக்கு விதிகளை மீறி பதவி என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரப்பாவுடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என விசாரணைக்குழு தலைவர் கூறினார்.