அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் ஆல் பாஸ் என்பதை ஏற்க முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது என ஏற்கெனவே கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பல்வேறு பல்கலைக்கழகங்கள், அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் முடிவுகளை அறிவித்துள்ளதாகக் கூறி, புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகள் நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வருவதால், அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என அரசுத்தரப்பும், யுஜிசி தரப்பும் கூறின.
மேலும் அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என யுஜிசி தரப்பு தெரிவித்தது. வரும் 20ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.