திருவண்ணாமலையில், தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல முயன்ற, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, திருவண்ணாமலையில், அண்ணா சிலை அருகே, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல, பாஜகவினர் முயன்றனர்.
அப்போது, முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பேசிய முருகன், திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கிரிவலம் செல்ல தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.