தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சிற்றாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சிவகிரியில் 50 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 16.8 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகி இருக்கிறது. தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருக்கும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.