தனிக்கட்சி தொடங்குவது குறித்து 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக வெளியாகி வரும் தகவலை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மறுத்துள்ளார்.
அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் மு.க. அழகிரி, தனிக்கட்சித் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகின.
இதேபோல் பா.ஜ.க.வில் அவர் இணைய போகிறார் என்றும், அவருடைய மகன் துரைதயாநிதி முதலில் பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், உதவியாளர் மூலம் வாட்ஸ் அப்பில் மு.க. அழகிரி அனுப்பிய செய்தியில், தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக வெளியாகிய தகவல் தவறானது என மறுத்துள்ளார்.