தன்னை ராஜினாமா செய்ய சொல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், கல்குவாரி அனுமதி பெற்று நடத்தி வரும் துரைமுருகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்வாரா என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகன் பிரபுவுக்கு, கல்குவாரி உரிமம் வழங்கிய விவகாரத்தில் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார்.
ஸ்டாலினின் அறிக்கை தொடர்பாக பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், பொது ஊழியர் யாரும் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏலத்தில் பங்கேற்கக்கூடாது என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.