தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.
நாளொன்றுக்கு 500பேர் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவருடன் பெற்றோர் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.