நடப்பு கல்வியாண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, அரசிடம் தேர்வுத்துறை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.