தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரை தொலைவில் இருந்தே சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.