தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் உட்புற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நாளை டெல்டா மாவட்டங்களிலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனவும், செவ்வாயன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.