திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகைத் தீப நாளன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், மலையைச் சுற்றவும், மலை ஏறவும் தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலால் அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் 5 ஆயிரம் பேர் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், திருக்கார்த்திகை நாளில் அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.