கோவில்களில், வருகிற திங்கட்கிழமை முதல், குடமுழுக்கு விழா நடத்த, தமிழ்நாடு அரசு, அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து, வருகின்ற திங்கட்கிழமை முதல், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதிக்கப்படுவதாக, தெரிவித்துள்ளது.
100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழாவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் பங்கேற்போர், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.