அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி/ பல்கலைக்கழகங்களை டிசம்பர் 2ஆம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும் என்றும், கல்லூரிகள், விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாணவர்களுக்கு ஏற்கெனவே நடைபெற்று வரும், இணையவழிக் கல்வி முறை தொடர்ந்து நடைபெறும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.