தமிழ்நாட்டில், புதிதாக 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில், 2 ஆயிரத்து 347 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில், கொரோனா கணிசமாக குறைந்துவரும் நிலையில், புதிதாக 565 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 190 பேருக்கும், செங்கல்பட்டில் 148 பேருக்கும் பெருந்தொற்று பாதிப்பு உறுதி யாகியுள்ளது.