தீபாவளியை முன்னிட்டு நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் என நீதிபதி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜெயகுமாருக்கு அந்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எழுதி உள்ள கடிதத்தில், தமிழகம் முழுவதும் லட்ச ஒழிப்புத்துறையினர் தீபாவளி பரிசுகள் வழங்குவதை தடுக்கவும்,லஞ்சத்தை ஒழிக்கவும் சோதனை நடத்துவதை சுட்டிக்காட்டி உள்ளார்.
நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்பு வகைகளை வழங்க வேண்டாம் என்றும், அது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.