பாஜகவின் வேல் யாத்திரை என்பது, கோவில் யாத்திரை அல்ல, முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என தமிழக டிஜிபி, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக தொடர்ந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், வேல் யாத்திரையில் முறையாக முகக்கவசம் அணிவதும்,தனி மனித இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு, 200க்கு மேற்பட்டோர் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது பாஜக தரப்பிடம், தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி?, அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்காமல் யாத்திரை நடத்தியது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.