அரியலூரில் போலீஸ் சீருடை அணிந்து நடமாடிய இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வி.கைகாட்டி பகுதியில் காக்கி சீருடையிலிருந்த இளைஞர், சரக்கு வாகனத்தை வாடகை பேசிக் கொண்டிருந்ததை ரோந்து போலீசார் கண்டனர்.
காக்கி சீருடையில் ஆந்திர போலீஸ் போல சிவப்பு கயிறு இருந்ததால் சந்தேகமடைந்து விசாரித்ததில், இளைஞரின் பெயர் பாலமுருகன் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தந்தை வைத்திருந்த பணத்தை எடுத்துவந்து புதிய மோட்டார் சைக்கிள், போலீஸ் சீருடை ,ஊசிபோடும் சிரிஞ்ச் உள்ளிட்டவற்றை வாங்கியதை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்