அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரீஸ், எதை விரும்பினாலும் அதை அடைந்து விடும் திறன் கொண்டவர் என்று சென்னையில் வசிக்கும் அவருடைய சித்தி சரளா கோபாலன் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரீசின் மூதாதையர், திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கமலாவின் தாயார் சியாமளாவின் இளைய சகோதரியான சரளா கோபாலன் அளித்துள்ள பேட்டியில், சண்டீகரில் தாம் மருத்துவராக பணி புரிந்த போது, பலமுறை அங்கு வந்து தம்மை கமலா ஹாரீஸ் பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதை செய்தாலும் அதை திறம்பட செய்யக்கூடியவர் கமலா ஹாரீஸ் என்றும், எதை விரும்பினாலும், அதை அவர் அடைந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.