செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கடன் தொல்லையால் ஓட்டுநர் தற்கொலை ? எச்.டி.எப்.சி. வங்கி கிளை மீது புகார்

Nov 08, 2020 09:12:42 AM

தேனியில் ஊரடங்கு காலத்திலும் கார் கடனை திருப்பி செலுத்தக்கூறி எச்.டி.எஃப்.சி. வங்கி நெருக்கடி அளித்ததால், மனமுடைந்து கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. தற்கொலைக்கு முன் அந்த கார் ஓட்டுநர் தனது மகளிடம் பரிதவிப்புடன் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான முருகன், தன் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு தேனியில் உள்ள HDFC வங்கி கிளையில் 9 லட்சம் ரூபாய் கார் கடன் பெற்ற முருகன், அதற்கான தவணை தொகையை சில மாதங்களாக முறையாக செலுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக, வருமானமில்லாததால் முருகன், 6 மாதங்களாக தவணை தொகை கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடன் வசூலிக்கும் பிரத்யேக ஊழியர்கள் சிலர் முருகன் வீட்டுக்கு வந்து கடனை திருப்பிச் செலுத்தக்கூறி, காரை ஜப்தி செய்துவிடுவோம் என மிரட்டி நெருக்கடி அளித்தாகவும் சொல்லப்படுகின்றனது. இதனால், மனமுடைந்த முருகன், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலுக்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு, வீட்டில் இருந்த தன் மகள் ரம்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவர், HDFC வங்கி நிறுவனத்தினர் தன்னை மிகவும் தொந்தரவு செய்வதாகவும், தாம் பேசுவதை மட்டும் போனில் ரெக்கார்டு செய்துகொள்ளும்படி பரிதவிப்புடன் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கார் ஓட்டுநர் முருகனை தற்கொலைக்கு தூண்டிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி தேனி HDFC வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது, முருகனின் மனைவியும், மகளும் சாலையில் கிடந்து கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், அசம்பாவிதங்களை தவிர்க்க, எச்.டி.எஃப்.சி வங்கி முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த எச்.டி.எஃப்.சி வங்கி கிளை மேலாளர், கடனை திருப்பி செலுத்தக் கேட்டு முருகன் வீட்டுக்கு சென்ற ஊழியர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 


Advertisement
ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்
காதலியைப் பார்ப்பதற்காக காத்திருந்த போது, திடீரென வந்த காதலியின் தங்கையிடம் சில்மிஷம் செய்த காதலன்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் முறைகேடுக்கான ஆதாரம் இல்லை
கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து மக்கள் போராட்டம்
ராமநாதபுரம் அருகே சாலை பாலத்தில் கார் மோதி விபத்து
UPI, ATM, கிரெடிட் கார்டு மூலம் பயணச்சீட்டு வாங்குவது குறித்து நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு
ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிவறை
விளாத்திக்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த அரசுப் பேருந்து
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..

Advertisement
Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி


Advertisement