கயிறு அறுந்து கடல் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட சுமைப்படகு ஒன்று, நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது.
250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பனில் புதிய இரட்டை வழி ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக, கட்டுமான பொருட்களை சுமந்து செல்லும் பார்ஜ் எனப்படும் சுமைப்படகு, இன்று அதிகாலையில் ரயில் பாலத்தில் மோதியது. இதனையடுத்து தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மீனவர்கள் உதவியோடு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுமைப்படகு மீட்கப்பட்டது.
சம்பவத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு, சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயில் வந்தபோது சுமைப்படகு மோதி இருந்தால் அசம்பாவிதம் நேர்ந்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.