கோவையில் துணி வியாபாரி போர்வையில் பதுங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த பிரபல செம்மரக்கடத்தல் மன்னன் ஹக்கீம் என்ற பாட்சா கைது செய்யப்பட்டுள்ளான்.
ஆந்திரா மாநிலம் கடப்பா தாதிபந்திரி அருகே கடந்த 2- ம் தேதி கார் ஓன்று விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த பெருந்துறையை சேர்ந்த 4 தமிழர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் செம்மரகட்டைகள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது கடப்பா மாநில போலீசார் விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் சிலர் காயம் அடைந்து. கடப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களிடம் போலீசார் மேற்கொண்டனர். விசாரணையில் கோவையை சேர்ந்த பாட்ஷா என்பவர் செம்மர கடத்தலில் மூளையாக செயல்படுவது தெரிய வந்தது.
இதனையடுத்து பாட்ஷா குறித்து ஆந்திர போலீசார் விசாரித்த போது , அவன் சர்வதேச கடத்தல் மன்னன் ஹக்கீம் என்பது கண்டுபிடித்தனர். கோவையில் தன் பெயரை தனது பெயரை பாட்ஷா குனியமுத்தூர் பகுதியில் துணி வியாபாரத்தில் ஈடுபடுவது போல செம்மரைக்கட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்துள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்த கோவை மாநகர போலீசார் உதவியுடன் , ஆந்திர மாநில போலீசார் குனியமுத்தூர் காவேரி நகர் பகுதியில் தங்கியிருந்த ஹக்கீமை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹக்கீமிடம் இருந்து செம்மர கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டக. ஃபையஸ் செரீப் என்ற சர்வதேச செம்மர கட்டை கடத்தல் கும்பல் தலைவனுடன் ஹக்கீமுக்கு தொடர்பு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹக்கீமை கைது செய்த ஆந்திர மாநில போலீசார், அவனை கடப்பா கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.