சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று மாலை கொரோனா அறிகுறியோடு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா இருப்பது இன்று காலை உறுதியாகியுள்ளது. அவரது நுரையிரலில் தொற்று பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.