திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் நாயை விழுங்கியபடி சுருண்டுக் கிடந்த மலைப்பாம்பினை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ரோப்கார் நிலையம் அருகில் மரங்கள் நிறைந்துள்ள பகுதியில் 15 அடி நீள மலைப்பாம்பு நாயை விழுங்கியதாகக் கிடைத்த தகவலில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதனை லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.