செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

350 விலை மதிப்பில்லாத பொருள்கள்; 40 ஆண்டுகளுக்கு பிறகு சரிபார்ப்பு!- ராமேஸ்வரம் கோயிலில் 30 பேருக்கு நோட்டீஸ்

Nov 04, 2020 02:42:53 PM

சுமார் 1500 ஆண்டுகளள் பழமையான ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம்,செம்பு ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட 350- க்கும் மேற்பட்ட விலைமதிப்பில்லாத அணிகலங்கள் உள்ளன. இந்த அணிகலங்கள் அனைத்தும் கோயி லின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி சிவராத்திரி, ஆடி திருக்கல்யாணம், நவராத்திரி விழா உள்ளிட்ட திருவிழா காலங்கள் மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா, தினசரி பள்ளியறை, ஆறுகால பூஜைகளின் போது இந்த ஆபரணங்கள் அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும்.

கருவுவூலத்திலிருந்து கோயில் இணை ஆணையர் முன்னிலையில் ஊழியர்கள் மற்றும் குருக்கள்களிடம் கொடுத்து சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு பாதுகாப்பாக மீண்டும் கருவூலத்திலேயே வைக்கப்படும். இந்த நிலையில் , ராமேஸ்வரம் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அனைத்து அணிகலங்கலும்; சரிபார்த்து நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. சாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், பவளம் உள்ளிட்ட அனைத்து வகையான ஆபரணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. திருவிழா காலங்களில் சுவாமி , அம்பாள் பவனி வரும் தங்கம் வெள்ளியால் செய்யப்பட்ட தேர்கள், பல்லக்குகள் உள்ளிட்டவையும் எடை சரி பார்க்கப்பட்டன.

சரிபார்க்கம் பணியின் போது கோயிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் பல நகைகளில் அதன் எடை குறைந்ததிருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து கோயில் பணியாளர்கள்,குருக்கள், ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோயில் நிர்வாகத்திடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. விளக்கம் தரவில்லையெனில் இழப்பீட்டு மதிப்பீட்டுத்தொகை வசூல் செய்யப்படும் என்றும் துறைரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் கோவில் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து ராமேஸ்வரம் கோயிலு இணை ஆணையர் கல்யாணியை தொடர்பு கொணடு கேட்ட போது, '' தமிழ்நாடு முழுவதும் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் தங்கம் ,வெள்ளி, செம்பு உள்ளிட்ட பொருள்களின் மதிப்பீடு நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் கோயிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நகை மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் அறிக்கைதான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தட்டு,கும்பாலம், மணி , சர விளக்குகள், ஊஞ்சல்,தேர் உள்ளிட்ட வெள்ளியால் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் தங்க கவசம்,கிரிடம், தேர், அலங்கார பொருள்கள், தங்கம் வெள்ளியால் ஆன சாமி அம்பாள் வீதி உலா வரும் வாகனங்கள், சாமி ஆராதனை செய்யப்படும் தங்கத்தினாலான பொருள்களின் எடை குறைவாக உள்ளன என்பது தெரியவந்தது.

எடை குறைவுக்காக முறையான காரணம் குறித்து கோவில் நிர்வாகம் தகுந்த விளக்கம் அளிக்கும் படி மதிப்பீட்டாளர்கள் குழு உத்தரவிட்டுள்ள தாகவும், அதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் குருக்களிடம் தகுந்த காரணத்தை நிர்வாகத்திற்கு எழுத்து ப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் . தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு 40 வருடங்களுக்கு பின் தற்போது நடைபெற்றுள்ளது. பெரும்பாலான குருக்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். புதிய அலுவலர்கள் குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாகவே பயன்பாட்டில் இருக்கும் பொருட்கள் சேதம் அடைவதும், தேய்மானம் அடைவதும் இயல்புதான். ஆகவே முறையான விளக்கம் வந்தவுடன் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பி வைப்பது நடைமுறை'' என்றார்.


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement