தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில், தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது என்றார்.
இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சராசரியாக 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும், இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் இயல்பான சராசரி மழை அளவு 34 செ.மீ. என்றும் அவர்கூறினார்.
நடப்பு ஆண்டில் இயல்பு சராசரியை விட 8 செ.மீ. அளவுக்கு அதிக மழை பெய்துள்ளதாகவும், சென்னையில் 44 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும், இது வழக்கத்தைவிட ஒரு சதவீதம் மழை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தென்மேற்கு பருவ மழையால் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.