உணவு வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபி ஜாபர் சேட் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டிஜிபியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜாபர் சேட் வகித்து வந்த உணவு வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபி பதவியை, இனிமேல் ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு கூடுதலாக வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பி கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி ஏ.டி. துரைகுமார், சென்னை காவல்துறை நிர்வாக பிரிவில் காலியாக இருந்த டிஐஜி பதவியில் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.