தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்‘சி’மற்றும் ‘டி’பிரிவுதொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை அளிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 8 ஆயிரத்து 400 ரூபாய் பெறுவர் எனவும், மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2லட்சத்து 91ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.