தூத்துக்குடி அருகே புரோட்டா கடை உரிமையாளரின் மகனை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு, கல்லாவில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராஜபுரத்தில் வேல்ராஜ் என்பவர் புரோட்டா ஸ்டால் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு கடையை மூடிக்கொண்டிருக்கும்போது 2 மர்மநபர்கள், வேல்ராஜின் மகன் வாழ்வாங்கியை சரமாரியாக வெட்டிவிட்டு கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வாழ்வாங்கி உயிரிழந்தார்.
இது குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்த நிலையில், சிசிடிவி கேமராக்காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.