செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தலைபிரசவத்துக்காக காத்திருந்த இளம்பெண் தவறான சிகிச்சையால் குழந்தையுடன் பலி - மருத்துவமனையில் மக்கள் போராட்டம்

Oct 31, 2020 02:30:22 PM

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தலை பிரசாரத்திற்கு வந்த இளம் பெண் தவறான சிகிச்சையால் குழந்தையுடன்  இறந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பாசார் என்ற கிராமத்தைச் சேர்ந்த அயல்துரை என்பவரின் மனைவி கற்பகம் (வயது 20 ).  கற்ப்பகம்  நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்று அருகிலுள்ள தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக கற்பகம் அனுமதிக்கப்பட்டார். ஆனால், பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டது. அதே வேளையில், கற்ப்பகத்துக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதனால், மேல் சிகிச்சைக்காக  கற்பகம்  கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கற்பகத்தின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அவரின் கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கற்பகம் இறந்து போனார்.

இறந்த கற்பகம்  மற்றும் அவரின் குழந்தையின் உடல்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. கற்பகத்தின் உடலை பெற்றுச் செல்ல அவரின் உறவினர்கள் காத்திருந்த நிலையில், அயல்துரைக்கு ஆதரவாக,  பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாய், குழந்தை உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். கற்பகத்தின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி இராமநாதன் தலைமயிலான போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து சாலைமறியல் கை விடப்பட்டது.

இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement