'அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்... விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா...' - உண்மை விவசாய பெருங்குடி மக்கள் என்ற பெயரில் மயிலாடுதுறை நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் கால் பதிப்பார் என்று அவரது ரசிகர்கள் கடந்த 30 ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் உள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். நிச்சயம் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அரசியலில் ஈடுபடுவது குறித்தும் சமூக வலைதளங்களில் வேறு விதமான தகவல்கள் பரவின.
இதற்கிடையே, நேற்று தனது அறிக்கையின் மூலம் சமூகவலைத் தள வதந்திக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், இன்று காலை மயிலாடுதுறை நகர்ப்புறங்களில் பல்வேறு இடங்களில் ரஜினிகாந்தை அரசிலுக்கு வருமாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் "அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்... விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா..." - உண்மை விவசாய பெருங்குடி மக்கள் மயிலாடுதுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை சுற்றுவட்டாரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.