ஈரோடு மாவட்டம் பவானி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2லட்சத்து 31ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன், நகைக் கடன் மற்றும் விவசாய கடன்கள் வழங்குவதற்கு சங்கத்தின் செயலாளர் மற்றும் தலைவர் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தன.
இதனை அடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 6 மணி நேரம் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் கணக்கில் வராத 2 லட்சத்து 31ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.