தமிழகத்தில் 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு வேளாண்துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து, அனைத்து மாவட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அதிக நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், புரபோனாபாஸ், சைபர்மெத்ரின், குளோரிபைபாஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் மருந்துகள் 2 மாதங்களுக்கு தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.