வானூர்தி, பாதுகாப்பு தளவாடங்கள், புதுப்பிக்க தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகள் மேற்கொள்பவர்களை, தமிழக அரசு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
"யாதும் ஊரே" என்ற தலைப்பில் நடைபெற்ற உலகத் தமிழர் இணைய மாநாட்டில் பங்கேற்று, மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர், இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருவதில், நாட்டிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.