ஈரோட்டில் நந்தா கல்விக் குழுமத்தில் இருந்து கணக்கில் வராத 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, நந்தா அறக்கட்டளை மற்றும் அதன் தலைவர் சண்முகனுக்கு சொந்தமாக 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பிற்பகலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு, பெருந்துறை, கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் கல்வி நிறுவனங்கள், பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை தொடரும் நிலையில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத முதலீடு, பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை ஆணையர் சுராபி அலுவாலியா தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள் மூலம், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துவிட்டு, குறைவான தொகைக்கு கணக்கு காட்டி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளதாக தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.