மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை கணக்கிட என்ன தயக்கம் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தியை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 1992ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே (16.11.1992) உத்தரவு பிறப்பித்த நிலையில், OBC குறித்து கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? என்றும், கணக்கெடுப்பு நடத்தினால் தானே இடஒதுக்கீடு தொடர்பானவற்றை வழங்க இயலும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.