தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பின், ஒருநாள் மொத்த எண்ணிக்கை, தொடர்ந்து 3 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
புதிதாக 2,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில், 4 ஆயிரத்து 29 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 27 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில், கொரோனா கணிசமாக குறைந்துவரும் நிலையில், புதிதாக 695 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 209 பேருக்கும், செங்கல்பட்டில் 144 பேருக்கும், திருவள்ளூரில் 115 பேருக்கும், திருப்பூரில் 99 பேருக்கும், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.