செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"கோயில்களில் வித்யாரம்பம்..! குழந்தைகளுக்கு எழுத பயிற்சி"

Oct 26, 2020 12:57:43 PM

விஜயதசமியை முன்னிட்டு இன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த ஒரு செயலுக்கும் வெற்றி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். இதையொட்டி தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க திட்டமிட்டுள்ள பெற்றோர், கோயிலுக்கு அழைத்து வந்து நாக்கில் எழுத்துகளை எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசி, நெல் போன்ற தானியங்களில் எழுத வைத்தும் கற்றுக் கொடுப்பது வழக்கமாகும். அதன்படி பல்வேறு கோயில்களிலும் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் குழந்தைகளின் நாக்கில் தங்கத்தால் அ, அம்மா என எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதாயே என எழுதியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் தங்களது தாய்மார்களுக்கு குழந்தைகள் பாத பூஜை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நாகர்கோயில்:

நாகர்கோயில் சரஸ்வதி கோயிலுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர், அக்குழந்தைகளை மடியில் அமர வைத்து அவர்களின் நாக்கில் எழுதுகோல் போன்ற சாதனத்தால் தேனை தொட்டு எழுத்துகளை எழுதினர். பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் எழுத வைத்து கற்றுக் கொடுத்தனர்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் குரங்கு சாவடியிலுள்ள ஐயப்பன் கோயிலில் காலை முதலே குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கு வரிசையாக அமர்ந்து, தங்களது மடியில் குழந்தைகளை அமர வைத்து அரிசியில் எழுத வைத்தனர்.

விருதுநகர்:

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள பிரசித்து பெற்ற சொக்கர்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருக்கும் வித்யா சரஸ்வதி சன்னதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு குழந்தைகளை அழைத்து வந்த அவர்களின் கைகளை பிடித்து எழுத வைத்து பெற்றோர் கற்றுக் கொடுத்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயிலில் விஜயதசமியை ஒட்டி இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயிலுக்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர், நோட்டு,பென்சில்,பேனாவை வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் கொரானா பரவல் கட்டுப்பாடு காரணமாக கோயிலுக்கு வெளியே மடியில் குழந்தைகளை அமரவைத்து தாம்புளத்தில் பரப்பப்பட்டு இருந்த நெல்லிலும், சிலேட்டுகளிலும் எழுத வைத்து எழுத கற்றுக் கொடுத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலைமகள் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோர், கோயில் முன்பு வரிசையாக அமர்ந்து பச்சரிசியில் மஞ்சளை கொண்டு எழுத வைத்தனர்.

 


Advertisement
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி
போதை ஓட்டுநரால் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி
காரைக்குடி அதலகண்மாய் நிறைந்ததால் வெளியேறும் உபரி நீர் - ஆபத்தை உணராமல் குளித்து விளையாடிய சிறுவர்கள்
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - குளிக்கத் தடை
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்
விபத்துக்கான காரணம் குறித்து, லோகோ பைலட் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில்வே உயர்மட்டக்குழு விசாரணை
ரயில் தடம் மாறிய இடத்தில் பொது மேலாளர் ஆய்வு... விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
உசிலம்பட்டி நகராட்சி பெயரில் சாலையோர தற்காலிக கடைகளுக்கு ரூ.30-க்கான ரசீது கொடுத்து விட்டு ரூ.200 வரை வசூல்

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement