செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முதன்முறையாக பெரியகோயில் கருவறையில் ஒலித்த ’தெய்வத் தமிழ்’ - 1035 ம் ஆண்டு ஐப்பசி சதய விழா!

Oct 26, 2020 12:51:19 PM

சோழப் பேரரசன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு, முதன்முதலில் தெய்வத்தமிழில் பூஜை செய்யப்பட்டும் பேராபிஷேகம் நடைபெற்றது. குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட ராஜராஜன் - உலகமாதேவி சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன...

அருண்மொழி வர்மன் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன் சோழ நாட்டை ஆட்சி செலுத்திய மன்னர்களுள் தலைசிறந்தவனாவான். கி.பி 947 - ம் ஆண்டு தஞ்சாவூரில், ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்து,  கி.பி 985 முதல் கி.பி 1014 வரை தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டை ஆட்சி செலுத்தினான். ராஜராஜன் ஆட்சி செலுத்திய காலம் 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது. அந்த அளவுக்கு நிலச் சீர்திருத்தம், கட்டுமானம், கலை, போர், ஆட்சித் திறம், இலக்கியம், சமயம், வணிகம் என்று அனைத்து துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தான் ராஜராஜன். அதனாலேயே ராஜராஜன் ‘த கிரேட் ராஜராஜன்’ என்று அழைக்கப்படுகிறான்... ராஜராஜனின் ஆட்சித் திறத்துக்குச் சான்றாகத் தஞ்சை பெருவுடையார் கோயில் இன்றளவும் வானளாவ உயர்ந்து விளங்குகிறது...

ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதயத் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரியகோயிலில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுவதுண்டு. இந்த ஆண்டு, 1035 - ம் ஆண்டு சதயத் திருவிழா, கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் திருவிழாவாக மட்டும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தஞ்சை பெரிய கோயிலில் தெய்வத் தமிழில் பூஜை செய்யப்பட்டு பேராபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, பெருவுடையாருக்கு முன்பு ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகள், ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்தன் வேளாண்  என்பவரால் எடுப்பிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவர் சந்நிதியில் ஓதுவார்களால் தேவரத் திருமுறை பாடப்பட்டு பைந்தமிழில் பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தர்மபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் தலைமையில், பெருவுடையாருக்கு மூலிகை, பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, கரும்புச் சாறு, விபூதி, தயிர் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 48 மங்கலப் பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

1035 - ம் ஆண்டு சதய விழாவை  முன்னிட்டு ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..!


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement