கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், துரைக்கண்ணுவுக்கு வேறு பல நோய்களும் உள்ளதாகவும், CT ஸ்கேனில் அவரது நுரையீரலில் 90 சதவிகித பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு உச்சபட்ச சிகிச்சை வழங்கப்படுவதுடன், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நிலையை ஐசியூவில் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.