முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த அவரது தாயாரின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அத்வாலே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.