திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புல்லூர் தடுப்பணை நிரம்பி, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான குப்பத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணை தற்போது நிரம்பி, தமிழக பகுதிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், பாலாற்றின் கிளை ஆறான மன்னாறு, பூதனாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.