மதம் சார்ந்த கருத்துகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பெரும்பான்மையோரின் நம்பிக்கை குறித்த விஷயங்களை பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சூழலில் விழுப்புரத்தில் விவசாயிகளுக்கு 32 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டிலான டிராக்டர், நடவு செய்யும் இயந்திரம், கலப்பை ஆகியவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் பிற மதத்தினரை கொச்சைப்படுத்தும் கலாச்சாரம் பெருகி வருவதாக அப்போது அவர் கூறினார்.